அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட ஆங்கில மொழிமூலமான எழுத்தாக்கபோட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவி தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம் 07இல் கல்வி பயிலும் மதிவதணண் சுமேதா என்னும் மாணவியே இந்த சாதனையினை படைத்துள்ளார்.
இவர் யாழ் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பரிசோதகர் மதிவதணணின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.