தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்ககூடிய உறுதிமிக்க தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே –பிரதியமைச்சர் முரளிதரன்

இன்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்ககூடிய உறுதிமிக்க தலைவர் மகிந்த ராஜபக்ஸ மட்டுமே என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.


எதிரணியில் ஒன்றுகூடியவர்கள் அனைவரும் இனவாதம்மிக்கவர்கள் எனவும் அவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவித உரிமையும் வழங்ககூடாது என கூறுபவர்கள் எனவும் இது தொடர்பில் தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பில் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதுள்ள நாட்டின் சூழ்நிலையில் உறுதிமிக்க தலைவர் ஒருவர் தேவை.தற்போதைய நிலையில் மகிந்த ராஜபக்ஸ மட்டுமே ஒரேயொரு உறுதிமிக்க தலைவராகவுள்ளார்.

அவரை மீண்டும் ஜனாதிபதியாக்கி இந்த நாட்டின் ஸ்திரத்தன்மையினை பலப்படுத்தவேண்டும் என்பதே எமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.