மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களுடன் நியூசிலாந்து நாட்டுக்கான உயர் அதிகாரி சொனியா டக்லஸ் அவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (27) இடம் பெற்றது.
இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாக்கிஸ்தான் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முறைசாரா குடியேற்ற தொடர்பு அதிகாரி சொனியா டக்லஸ் மாவட்டத்திற்கு முதல் முறையாக விஜயம் ஒன்றை மேற்கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன் போது முறைசார புலம் பெயர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் பாதுகாப்பான புலம் பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் மாவட்டத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதே மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், மாவட்ட வெளி் நாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர் கே. ரமணபிரசாத், ICMPD நிறுவன பிரதிதிதிகள் என பலர் கலத்து கொண்டனர்.




