மட்டக்களப்பு சிறைச்சாலையின் நலன்புரி அமைப்பினால் இந்த நிகழ்வு இன்று காலை நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சர் எச்.வி.எச்.பிரியங்கர, சிறைச்சாலையின் பிரதான அதிகாரி ஆர்.மோகன்ராஜா, நலன்புரி உத்தியோகத்தர்களான வி.சுசிகரன்,எம்.ஐ.சபீனா,எல்.ஜே.சுதாகரன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஜே.ஜெயப்பிரியா,பிரதிபா கோன்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கைதிகள் ஊர்வலமாக சென்று மீண்டும் சிறைச்சாலையினை வந்தடைந்தனர்.