வெபர் கிண்ணத்தினை கைப்பற்றியது பாடுமீன் விளையாட்டுக்கழகம்

(லியோன் )

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய வெபர் ஞாபகார்த்த கிண்ண மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் கோல்ட் பீஸ் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்து சம்மேளனம் நடத்திய யு பிரிவு கழகங்களுக்கிடையிலான வெபர் ஞாபகார்த்த 4வது வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி   மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு பாடுமீன் மற்றும் கோல்ட் பிஸ்; அணிகள் மோதிகொண்டன .

இப்போட்டி நேற்று  மாலை 04.00 மணிக்கு ஆரம்பமானது .வருடாந்தம் நடைபெறும் இப்போட்டி 4வது தடவையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்று  நடைபெற்ற இறுதி போட்டியில்  கோல்ட் பிஸ் அணி  பாடுமீன் அணியை எதிர்த்து போட்டியிட்டது . இதில்  கோல்ட் பிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பாடுமீன் அணியை வீழ்த்தியது.

கோல்ட் பிஸ் அணியில் ஜருசன் 2வது நிமிடத்திலும் ,மீண்டும்  ஜருசன் 6வது நிமிடத்திலும் இரண்டு கோல்களை அடித்தார். கோல்ட் பிஸ் அணியை எதிர்த்து ஆடிய பாடுமீன் அணி 23நிமிடத்தில்  1கோல் அடிக்கப்பட்டது.
 
இறுதியில் இரு அணிகளுக்கு கொடுக்கப்பட்ட நேரம் நிறைவு பெற்றது. பாடுமீன்அணியை   கோல்ட் பிஸ்; அணி 3-1 கோல்களினால் வெற்றிக்கொண்டதுடன்,4வது வெபர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர்  எம் .உதயகுமார் ,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர் .

















-