இன்று வியாழக்கிழமை முகாமையாளர் எம்.ஐ.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாடிக்கையாளர்களுக்கு தென்னை, மா, தோடை, எலுமிச்சை மற்றும் சவுக்குமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் வித்தியாலயம் மற்றும் புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயங்களில் மரங்கள் நடப்பட்டன.
இந்த நிகழ்வில் வங்கி அதிகாரிகள்,கல்வித்திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.