நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் மட்டக்களப்பு, திஸவீரசிங்கம் சதுக்கத்தில் பெண்னொருவரின் தாலிக்கொடி மற்றும் தங்க மாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அலுவலகம் ஒன்றில் கடமையாற்றும் மேற்படி பெண் கடமை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது தலைக்கவசம் அணிந்துவந்த இருவர் குறித்த பெண்ணின் தங்க ஆபரணங்கள் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
எட்டு பவுண் தங்க நகைகள் இவ்வாறு பறித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் அந்த தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.