கிரான் பிரதேசத்துக்கு மின் உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஜனாதிபதியின் கடந்த வருட வரவுசெலவுத்திட்டங்களின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்களை  வலுவூட்டும் நிகழ்சி திட்டங்களில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாகயமுர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கு இனங்க   வியாழக்கிமை 2.10.2014 அன்று கிரான் பிரதேசத்துக்கு கோறளைப்பற்று பிரதேசசபையினால் மின் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற இணைப்புச் செயலாளர் பொன்.ரவிந்திரன் மற்றும் கிரான் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் கிரான் பிரதேசம் பொதுமக்கள் நடமாற்றம் உள்ள பகுதிகள் கடும் இருளடைந்த பகுதிகளாக காணப்பட்டன. இதனால் பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

இவ்வாறான பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் முகமாக பிரதி அமைச்சர் விணாயகமூர்த்தி முரளிதரனின்  வேண்டுகோளின் பெயரில் பிரதேச சபை செயலாளரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மின் உபகரணங்களை கிரான் பிரதேசத்திலுள்ள பல்வேறு பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படடன.

இவ்வேலைத்திட்டங்கள் ஊடாக கிரான் பிரதேசத்தில் ஏற்கனவே பழுதடைந்த மின் உபகரணங்களை இனங்கண்டு புதிய மின் உபகரணங்கள் பொருத்தும் வேலைத்திட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.