உலக கை கழுவும் தினத்தினை ஒட்டி மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தின் அதிபர் சுதாகரன் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் தாண்டவன்வெளியிலிருந்து ஆரம்பமாகி மட்டு திருமலை வீதி ஊடாக பயணித்து ஜோசப்வாஸ் வித்தியாலயத்தினை வந்தடைந்தது.
மாணவர்கள் மத்தியில் சுகாதாரப் பழக்கவழக்கங்களை மேம்படுத்தும் நோக்கோடு நடைபெற்ற இவ்விழிப்பூட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு உதவிக்கல்விப்பணிப்பாளர் லவகுமார் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.