புலமைப்பரிசில் பரீட்சையில் வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தி

2014ஆம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலுள்ள வந்தாறுமூலை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த சு.பிருந்திகா, ர.சதுர்ஜன், க.அபிநயா, ச.மிதுசாயினி, ச.யோசாயினி, யோ.தர்சிகா, பு.கௌசல்யா, பு.அர்சயன், தி.நர்மலோஜன், ச.டிலுக்சிகா, வி.மிருணா ஆகியோருக்கு அதிபர்  எஸ்.மோகன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கற்பித்த ஆசிரியர்கள், பெற்றாருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.