மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் கடற்பரப்பில் சுமார் 50 அடிகொண்ட இராட்சத மீன் கரையொதுங்கியுள்ளது.
இன்று மாலை இந்த மீன் கரையொதுங்கியுள்ளதாகவும் அது எந்தவகையான மீன் என தெரியவரவில்லையெனவும் மீன்வர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் டோமிங் ஜோர்ஜிடம் கேட்டபோது,
இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை காலை நாராவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் வருகைதரவுள்ளதாகவும் குறித்த மீன் தொடர்பாக ஆய்வுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த மீனை காண பிரதேசத்தில் உள்ள பெருமளவான மக்கள் கடற்கரையில் குழுமியிருந்தனர்.