வெளிநாடுகளிலும் நம் நாட்டிலும் வாழுகின்ற தாராள உள்ளம் கொண்டவர்களால் ஏழைகளுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள், சப்பாத்துகள், ஆடைகள், புத்தகங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டன.
யுத்தம், சுனாமி; வறுமை என பல வழிகளிலும் பந்தாடப்பட்ட வாகரை பகுதி மக்களுக்கு எம்மவர்களால் பல தரப்பட்ட உதவிகள் வழங்கப்படுவது அறியக் கூடியதாக உள்ளது.
எமது மண்ணில் அக்கறையும் அன்பும் கொண்ட திரு. றம்ஸி ஜோன் பிள்ளை (அவுஸ்திரேலியா), டீ.செல்வரெட்ணம் (கொழும்பு), திரு.மரியதாஸ் இதயராஜ் (அவுஸ்திரேலியா), கனகரெட்ணம் இராஜேந்திரா (மட்டக்களப்பு NDB வங்கி முகாமையாளர்), அன்னபூரணம் அமைப்பு, ஹம்டன் என்ஜினியரிங் (Pvt) Ltd ஆகிய நல்லுள்ளங்களால் அனுப்பப்பட்ட மேற்படி இரண்டு இலட்சம் ரூபா பணத்தைக் கொண்டு 75 வறிய மாணவர்களுக்கு குறித்த பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்நிகழ்வானது கடந்த 06.07.2014 அன்று வாகரை கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு NDB வங்கி முகாமையாளரான கனகரெட்ணம் இராஜேந்திரா குறித்த தொகுதிப் பொருட்களை மாணவர்களிடம் கையளித்தார்.
மேலும் இது மாதிரியான வறிய மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பலதரப்பட்ட உதவிகளை செய்வதற்கு தனது நண்பர்கள் எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.