லிட்டில் பேட்ஸ் பாலர் பாடசாலையின் கண்காட்சி -கண்களை கவரும் பொருட்கள் காட்சியில்

(லியோன்)

மட்டக்களப்பு லிட்டில் பேட்ஸ் பாலர் பாடசாலையின் மாணவர்களின் இரு தினங்கள் கொண்ட கண்காட்சி இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பத்துவைக்கப்பட்டது.


மாணவர்களின் பல்வேறு படைப்புகளைக்கொண்டதாக மட்டக்களப்பு மகஜனக்கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இந்த கண்காட்சி ஆரம்பித்துவைக்க்பபட்டது.

இன்று காலை ஆரம்பமான இந்த கண்காட்சி இன்று மாலை 5.00மணி வரையில் நடபெறவுள்ளதுடன் நாளை புதன்கிழமை காலை 9.00மணி தொடக்கம் மாலை 5.00மணி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு லிட்டில் பேட்ஸ் பாலர் பாடசாலையினால் நடத்தப்பட்டுவரும் இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வுக்கு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக சேவ்த சில்ரன் நிறுவகத்தின் பிராந்திய முகாமையாளர் மார்க் பெட்டர்சன் கலந்துகொண்டார்.

இந்த கண்காட்சியில் சிறுவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த கண்காட்சியில் கண்களைக்கவரும் அழகிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கழிவுப்பொருட்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி பொருட்களை பெருமளவான பாலர் பாடசாலை மாணவர்கள் பார்வையிட்டுவருகின்றனர்.