அந்நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் எமது நாட்டில் பல இடங்களிலும் பல பாடசாலைகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு,கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஆசிரியர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் திருமதி வேதநாயகி அருட்சோதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனார்.
இதன் போது பாடசாலையின் மூத்த நலன்விரும்பியான திருமதி லெட்சுமி சாமித்தம்பி அவர்கள் அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியினால் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டு மாணவர்களினால் ஆசிரியர்களை பாராட்டும் விதத்தில் கவிதைகள் பாடல்கள் போன்றனவும் இசைக்கப்பட்டன.
ஆசிரியர்களினாலும் ஆசிரியர் தின சிறப்பு பாடலும் பாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.