(லியோன்)
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபர் அருட்சகோதரி எம் .எலிசபெத்தின் சேவைக்கால பாராட்டும் ,பியாவிடை நிகழ்வும் இன்று கல்லூரியில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக கல்லூரி மாணவியர்களினால் வாத்திய இசை முழங்க , வீதியின் இருபுறமும் பாடசாலை மாணவிகளினால் கல்லூரி கொடிகள் அசைக்கப்பட்டு மட்டக்களப்பு பஸ் தரிப்பிட சுற்று வட்டத்திலிருந்து பவனியாக கல்லூரி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன .
இதன்போது இவருக்கு வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும் தெரிவித்த வண்ணம் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மிக கோலாகலமாக இடம்பெற்றது .
இந்நிகழ்விலே மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசெப் ஆண்டகை , மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் .சார்ல்ஸ் ,வலயக் கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் , மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , கோட்ட கல்வி அதிகாரி எ .சுகுமாரன் ,பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி எஸ் .கங்கேஸ்வரன் , பேராசிரியர் மௌனகுரு ,கல்லுரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா , மற்றும் புனித மிக்கேல் கல்லூரி , வின்சன்ட் மகளீர் பாடசாலை அதிபர்கள் , அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை பழைய மாணவர்கள் , நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இந்நிகழ்விலே கல்லூரி மாணவியர்களின் மிக சிறப்பான பல நிகழ்வுகள் இடம்பெற்றதோடு , அதிபரின் 21 வருட சேவைக்கால செயல்பாடுகளை பற்றி பாராட்டி நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் சிறப்பு உரைகள் நிகழ்த்தப்பட்டு , அவரின் சேவைக்கால செயல்கள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது .