உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 01.10.2014 அன்று பி.ப 4.00 மணியளவில் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் வெகுவிமர்சையாக மகாத்மா காந்திப் பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது மாநகர சபையினால் நடாத்தப்படும் பாலர் பாடசாலைகளின் மாணவர்கள் பிரதம விருந்தினர்களாக மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
மேலும், துவிச்சக்கர வண்டி சவாரி, குதிரை சவாரி, பேணியில் பந்தெறிந்து விளையாடுதல், பலூனில் இருந்து உடைத்தல், யானைக்குக் கண்வைத்தல், குளம் கரை விளையாட்டு சுட்டிக் குழந்தைகள் மற்றும் நவீன தொழிநுட்ப ரீதியில் டாப் விளையாட்டு போன்ற விளையாட்டுக்கள் பாலர்களிடையே நிகழ்த்தப்பட்டன.
இதன்போது பங்கு பற்றிய அணைத்து பாலகர்களுக்கும் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், HSDP-22 திட்டத்தின் கீழ் 04 மாநகர பாலர் பாடசாலைகளுக்கும் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் மற்றும் சமையல் அடுப்பு, சிலிண்டர் போன்றன ஆணையாளரினால் வழங்கிவைக்கப்பட்டன.