பாடசாலையின் அதிபர் கே.செல்வராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரவியராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் சிறுவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சாரணர் பாசறை பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதன்போது விசேடமாக வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப்பெற்று மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பட்டிருப்பு வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்ற செல்வன் சுவர்ணராஜன் அபிசேக் பாராட்டிக்கௌரவிக்கப்பட்டார்.
இதேபோன்று பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப்பெற்ற ஏழு மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் மாணவர்கள்,பெற்றோர்,பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் ஆலயங்களின் தலைவர்கள் என பெருமளவானேர்ர் கலந்துகொண்டனர்.