மண்டூர் வாசகர் வட்டமும் வெல்லாவெளி பொலிஷாரும் இணைந்து நடாத்திய விழிப்பூட்டல் கருத்தரங்கு

(தவக்குமார்)

நாடாவிய ரீதியாக அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்றினை மண்டூவாசகர் வட்டத்தினரும் வெல்லாவெளிப்பொலிஷாரும் இணைந்து நேற்று சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மண்டூர் பொதுநூலக கேட்போர் கூடத்தில்  நிலைய பொறுப்பதிகாரி எச்.சி.வி.வெலகேதர தலைமையில் நடைபெற்றது.


ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டது பின்னர் ஒரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பமாகின வரவேற்பு உரையினை நிலையப்பொறுப்பதிகாரி நிகழ்த்தினார்.

இன் நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக மட்டக்களப்பு  பொலிஸ் தலைமையக சிறுவர் மகளிர்விவகாரங்களுக்கு பொறுப்பான பொறுப்பதிகாரி திருமதி. எஸ்.ஜ. இனோகா உதவிப் பொறுப்பதிகாரி திருமதி.எஸ்.ஜ.நிலங்கா வருகைதந்திருந்தனர்.

இதன்போது மாணவர்கள் பொதுமக்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் அவர்களுக் எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு  வழங்கப்படும் தண்டனைகள் எவ்வாரானது பற்றியும் சிறுவர் துஸ்பிரNயுhகங்கள் என்றால் என்ன பற்றியும் ஒளிப்பட காட்சிகள் திரையில் இடப்பட்டு விளக்கங்களை வழங்கினர்.

அதனைத் தொடந்து வெல்லாவெளிப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுப் பொறுப்பதிகாரி லால் விக்கிரமசிங்க அவர்கள் எமது பிரதேசத்தில் நடைபெறுகின்ற வீதி வித்துக்களின் மூலம் மக்கள் மரணமடைவதற்கான காரணங்கள். இந்த இழப்புக்களை எவ்வகையான முறையில் தவித்துக்கொள்ளமுடியும் பற்றி ஒளிப்பட புகைப்பட உதாரணங்கள் மூலம் தெளிவான விளக்கங்களுடன் போக்குவரத்து விதிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

இன் நிகழ்வினை சிங்கள தமிழ் மொழிகள் மூலம் மொழிபெயர்ப்பினை பொ.பரமானந்தராசா மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எம்.கபீர் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இக்கருத்தரங்கிற்கு பொது மக்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் கிராமசேவை உத்தியோகத்தர்கள்  கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.இறுதியாக திருமதி.சிவராசா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.