மட்டு.மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் தேசிய ஆசிரியர் தின நிகழ்வு

தேசிய ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் இ;ன்று தேசிய ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் தேசிய ஆசிரியர் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் பொ.நேசதுரை தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு மேற்கு பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார்,கோட்டக்கல்வி அதிகாரி நா.தயாசீலன் ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர் கலந்துகொண்டனர்.

பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் மாணவர்கள்,பெற்றோர் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தனர்.

இதன்போது ஆசிரியர்கள்,அதிதிகள் மாணவர்களின் கரகோசத்தின் மத்தியில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதன்போது மாணவர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு ஆசிரியர்கள்,அதிபர் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வின்போது பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.