மட்டக்களப்பில் மின்னல் தாக்குதல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (5) மாலை ஞாயிற்றுக்கிழமை மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


மேற்படி வந்தாறுமூலை கிழக்கில் விசித்து வந்த ஜோன் ரஞ்சன் (வயது 46) என்ற இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையே மின்சார தாக்குதலுக்குளாகி உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பிரதேசத்தில் மழைபெய்யாத நிலையில் சிறு மின்னல் இடித்து கொண்டிருக்கும்; வேளையில் சுமார் 7.45 மணியளவில் தனது வீட்டிற்குள் இருந்த மின்சார பொருட்களை தான் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும்போதே மின்சார தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்து இருக்கின்றார் என பொலிசார் தெரிவித்தனர். மின்சாராம் தாக்கி உயிரிழந்தவர் மின்சாரா பொருட்கள் திருத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மின்சாரம் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்பஸ்தாரின் சடலம் மேலதிக பிரேத பிரிசோதனைக்காக செங்கலடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும்தெரிவித்தனர்.

இச்சம்வம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.