விழிப்புலனற்றோரின் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

(விட்னி ராஜ்)

விழிப்புலனற்றோரின் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.


மட்டக்களப்பு லயன்ஸ் கழகம்,மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகமும் மட்டக்களப்பு,கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் இணைந்து இந்த நிகழ்வினை நடத்தினர்.

இன்று காலை 9.30மணியளவில் மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இருந்து சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் வெள்ளைப்பிரம்பின் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலும் மாபெரும் பேரணி நடைபெற்றது.

காந்தி சதுக்கத்தில் ஆரம்பமான இந்த பேரணியானது மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.

இந்த பேரணியில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன்,மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் உட்பட லயன்ஸ் கழக பிரதிநிதிகள்,தரினசம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள்,பாடசாலை மாணவர்கள்.பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பேரணியானது தேவநாயகம் மண்டபத்தினை வந்தடைந்ததும் அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன. இதன்போது தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.