கடந்த 21 வருடங்களுக்குப் பின்பு காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்டசையில் இம் முறை சித்தியடைந்துள்ளனர்.
இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களான எஸ்.அஹமட் சனா 172 புள்ளிகளையும், ஏ.எம்.பாத்திமா அப்ஸா 162 புள்ளிகளையும் பெற்று இவ்விரு மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
இப்பாடசாலையின் அதிபர் திருமதி அஜீரா கலீல்தீனின் வழிகாட்டலில் ஏ.சி.அஜ்வத் ஆசிரியரின் கற்பித்தலில் இவ்விரு மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
இப்பாடசாலை காத்தான்குடியிலுள்ள எல்லைக்கிராமமான ஹைறாத் நகர் எனும் கிராமத்தில் உள்ளது.
பின் தங்கிய பாடசாலையான இப்பாடசாலையை மேற்படி அஜீரா அதிபர் பொறுப்பேற்றதிலிருந்து இப்பாசடாலையை சிறப்பாக செய்து வருகின்றார்.
இந்த அதிபரின் வழிகாட்டலில் இங்கு கல்வி நடவடிக்கை மற்றும் புறகீர்த்தி நடவடிக்கைகள் அடங்களாக இப்பாடசாலை வளர்ச்சியடைந்து வருகின்றது
எனினும் இப்பாடசாலைக்கு பௌதீக வளம் தேவையாக உள்ளது.
இப்பாசடாலையின் ஒரு பகுதிக்கான சுற்றுமதில் கட்ட வேண்டியுள்ளதாக இதன் அதிபர் திருமதி நஜீரா தெரிவிக்கின்றார். இங்குள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன.
இப்பாசடாலையில் கற்கின்ற மாணவர்கள் அனைவருமே வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் சித்தியடைந்துள்ள இந்த இரண்டு மாணவர்களுமே மிகவும் வறிய மாணவர்கள் இதில் சித்தியடைந்துள்ள பெண் மாணவியின் தந்தை ஒரு நாட்டாமை தொழில் செய்பவர் இம் மாணவியின் குடும்பம் ஒரு வாடகை வீட்டில்தான் இருந்து வருகின்றார்கள்.
இவர்களுக்கு சொந்த வீடு கிடையாது. இம் மாணவி புலமைப்பரிசில் பரீட்சை எழுதுவதற்கு முதல் தினமன்று வீட்டு வாடகையை கொடுப்பதற்கு பணம் இல்லாமல் இம் மாணவியின் பெற்றார் கஸ்டப்பட்டதாக இந்த மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் ஏ.சி.அஜ்வத் சுட்டிக்காட்டினார்.
சமூகத்தில் இவ்வாறு வறுமையினால் கற்பற்கு கஸ்டப்படும் மாணவர்களுக்கு உதவுவது சமூகத்தின் கடமையாகும். சமூக நிறுவனங்களின் பொறுப்பாகும்.
இப்படியான மாணவர்களின் கல்வியை ஊக்கு விப்பது அவசியமாகும்.
இப்பாசடாலை தற்போது அதிபர் அஜீராவின் வழிகாட்டலில் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இந்தப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றார்கள் வறியவர்கள் என்பதால் இப்பாடசலையை பௌதீக ரீதியாக முன்னேற்றுவதென்பது கஸ்டமாகவுள்ளதையும் அதிபர் குறி;ப்பிடுகின்றார்.
இந்தப் பாடசாலையில் இந்த சாதனையை நிலை நாட்டிய அதிபர் அஜீரா மற்றும் ஆசியர் அஜ்வத் அதே போன்று இந்த இரு மாணவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் வாழ்த்துக்கள.