(லியோன்)
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை கேட்போர் கூடத்தில் இன்று காலை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை சிறுவர்கள்,அவர்களின் பெற்றோர் மற்றும் ரோட்டரி கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் வைத்திய அதிகாரியின் பலகுரல் நிகழ்வு என பல சிறப்பான நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்விலே அனைத்து சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதுடன் , ரோட்டரி கழக உறுப்பினர்களினால் பெறுமதிவாய்ந்த பரிசு பொருட்களும் இந்நிகழ்வில் சிறுவர்களுக்காக வழங்கி வைக்கப்பட்டது.