மட்டக்களப்ப மாநகரசபைக்குட்பட்ட திருப்பெருந்துறை கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்களகத்தால் சமூக நற்பணி வேலைத்திட்டம் பல மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
கடந்த சில மாதங்களாக திருப்பருந்துறைப் பகுதியில் குளவிகள் கொட்டி பல மாணவ மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மக்களின் வேண்டுகோளின் பேரில் ஆபத்தை விளைவித்து வந்த சுமார் 12 கருங்குளவிக்கூடுகள் கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழக இளைஞர்களால் அடையாம் காணப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் குளவிக்கூடுகள் இளைஞர்களினால் அழிக்கப்பட்டுள்ளன
குளவிகள் பல கொட்டினால் உயிராபத்துக்கூட ஏற்படும் என்பதுடன் மட்டுமல்லாது கடந்த சில நாட்களாக நாட்டின் பல பாகங்களிலும் குளவித்தாக்கம் அதிகாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.