(லியோன்)
மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் ஞானசூரிய சதுர்க்கம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 08.30 மணியளில் வீதியில் மஞ்சல் கடவையை கடக்க முற்பட்ட ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்களில் மோதுண்டதால் படுகாயமடைந்துள்ளார்.
நாவக்காடு விழாவட்டுவான் கிராமத்தை சேர்ந்த துவிச்சக்கர வண்டியில் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரியான (47) பாலசிங்கம் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .