பன்குடாவெளி கிராம வாழ்வாதார குழு மகா சங்கத்தின் மாபெரும் வியாபார சந்தையும் களியாட்ட நிகழ்வும்

(லியோன்) 

அம்கோர் சர்வதேச நிறுவன அனுசரணையில் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட  பன்குடாவெளி கிராம சாந்தி வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில்  பன்குடாவெளி கிராம வாழ்வாதார குழு மகா சங்கத்தின் மாபெரும் வியாபார சந்தையும் களியாட்ட  நிகழ்வும் இடம்பெற்றது.

இச் சந்தை மற்று களியாட்ட நிகழ்வில்  பிரதம விருந்தினராக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர். உ .உதயஸ்ரீதர் ,சிறப்பு விருந்தினராக  அம்கோர் நிறுவன முகாமையாளர் . ப .முரளிதரன் , பன்குடாவெளி கிராம உத்தியோகத்தர். எஸ் .கோகுல்ராஜ் ,பண்குடவெளி பாடசாலை  .அதிபர் வி .நல்லதம்பி , அம்கோர் நிறுவன அதிகாரிகளான, பி .டேவிட் , பி .ரோய்  , கே .ரூபன் ,திருமதி .சத்தியா விக்டர் ,திருமதி .அசோகானந்தி ,பண்குடவெளி கிராம அபிவிருத்தி தலைவர் ,மற்றும் கிராம மக்களும்  கலந்து சிறப்பித்தனர்  .

இன்று நடைபெற்ற வியாபார சந்தையில் பன்குடாவெளி கிராம  வாழ்வாதார குழுக்களினால் தயாரிக்கப்பட்ட  உணவு  பொருட்கள் ,பயிரிடப்பட்ட மரக்கறிவகைகள் ,பழவகைகள் , தானிய வகைகள்   என பல வகையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன . இக் கிராம வாழ்வாதார குழுக்களினால் கடந்த வருடமும் இவ்வகையான மாபெரும் சந்தை நிகழ்வை நடத்தி அதிகளவிலான வருமானத்தை பெற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது .