(லியோன்)
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு பாலமீன்மடு -திராய்மடு பகுதியில் வணக்கத்திற்குரிய நல்லதம்பி சடையப்பா சுவாமிகள் பல தசாப்த வருடங்களுக்கு முன் தோற்றுவித்த ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பஞ்சகுண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா இன்று காலை 08..00 மணி முதல் 10.00 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா நடைபெற்றது.
இக் கும்பாபிஷேக கிரியாரம்பம் கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 04.00 விநாயகர் வழிபாடுகள் மற்றும் கிரிகை பூசைகளுடன் ஆரம்பமாகி . ஆலய ஆரம்ப வழிபாடுகளை தொடர்ந்து 28ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 29ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனை தொடர்ந்து இன்று காலை சுபவேளையில் மஹா கும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது . இக் கும்பாபிஷேக நிகழ்வு விசேட பூஜைகள் யாவும் யாழ்,கோண்டாவில் ஸ்ரீ ஞானப்பழனி முருகன் தேவஸ்தான பிரதம குரு பிரதிஷ்டா சிவஸ்ரீ .த .ரவீந்திரராசா குருக்கள் நடத்தி வைத்தார்.
இன்று மாலை விசேட பூஜைகளுடன் தொடர்ந்து முருகப் பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதி வரும் காட்சிகள் இடம்பெறும் . இதனை தொடர்ந்து மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று 12ஆம் நாள் , 11.07.2014 வெள்ளிக்கிழமை காலை 07.00 மணிக்கு மாமாங்கப்பிள்ளையார் பேராலயத்திலிருந்து பாற்குடப் பவனி ஆரம்பமாகி ஆலயத்தை வந்தடைந்ததும் கிரியை பூசைகள் மற்றும் சங்காபிஷேக பூசைகளுடன் அமுது வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறும்.
இவ் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா 01.08.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 10.08.2014 ஞாயிற்றுக் கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெரும் .இன்று நடைபெற்ற ஆலய நிகழ்வுகளில் இறுதி நிகழ்வாக ஆலய பரிபாலன சபையினரால் திராய்மடு ஸ்ரீ முருகன் ஆச்சிரம கும்மிப் பாடல்கள் அடங்கிய இறுவெட்டு வெளியிடப்பட்டது . இதற்கு பாடல்களை இயற்றியவர் பாடலாசிரியர் கவிஞர் . கா . சிவலிங்கம் , பாடல்களை பாடியவர் இலங்கை வானொலி கலைஞர். வி . பத்மஸ்ரீ . இதற்கு இசையமைப்பு ஒளிப்பதிவு இசையருவி .சி .சிவாகரன் . இவ் இறுவெட்டு பாடல்கள் அனைத்தும் திராய்மடு ஸ்ரீ முருகன் புகழை போற்றி பாடப்பட்ட கும்மிப் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது .