மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கே.முருகானந்தம் -மட்டு.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இப்ராஹீம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் இப்ராஹீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் அலாவூதின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கான இடமாற்றங்களை சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.