குழந்தையின் தங்க மாலையை திருடிச் சென்றவர் மடக்கி பிடிப்பு –தம்பலவத்தையில் சம்பவம்

(தவக்குமார்)

மண்டூர் வெல்லாவெளி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தைக் கிராமத்தில் அதாவது நேற்று வியாழக்கிழமை பி.ப 3.00 மணியளவில் ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையின் கழுத்திலிருந்த தங்க மாலையை  திருடிச் சென்ற நபர் மக்களினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அதாவது குறிப்பிட்ட நபரின் வீட்டுக்கு சென்றவர் வீட்டு உரிமையாளரிடம் தனக்கு தண்ணீர் தாகமாக இருப்பதாகவும் தண்ணீர் தரும்படி கேட்டதாகவும் சமையல் அறைக்குள் தண்ணீர் எடுப்பதற்கு சென்றபோது குழந்தை அழுவதனை செவிமடுத்த தாய் வெளியில் வந்து பார்த்த வேளையில் குழந்தையின் கழுத்திலிருந்த மாலை இல்லாமல் இருப்பதை அவதானித்தார.;

பின்னர் தனது அயல் வீட்டாருக்கு விடயத்தை தெரியப்படுத்தியபோது நபரை பின்தொடந்தவர்கள் கல்முனை முச்சக்கரவண்டித் தரிப்பிடத்தில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டார்.

பின்னர் இவர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணைக்காக குறிந்த நபர் வெல்லாவெளிப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டாதகவும்.11.01.2014ம் திகதி அடையாள அணிவகுப்பிற்காக நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்தனர்.

இவர் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.