(தனுசாந்த்)
தைத்திருநாளை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரியகல்லாறு கல்லாறு விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்துள்ள மாபெரும் மரதன் ஓட்ட போட்டி செவ்வாய்க்கிழமை(14-01-2014)நடைபெறவுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 06மணியளவில் பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் இந்த மரதன் ஓட்டப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வானது கல்லாறு விளையாட்டுக்கழகத்தின் தலைவர் கே.சுரேஸ் தலைமையில் நடைபெறவுள்ளதாக கல்லாறு விளையாட்டுக்கழகம் அறிவித்துள்ளது.
இந்த போட்டியில் கலந்துகொள்ளவிரும்புபவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக தகவல்களுக்கு கழகத்தின் செயலாளரை 0776541541 என்ற தொலைபேசியுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தைத்திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை கல்லாறு விளையாட்டுக்கழகம் மேற்கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.