இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு சாலைக்கு 08 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதம்

(துசி)

இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு சாலைக்கு கடமையாற்றுவதற்காக தொழில்நுட்பவியலாளர்கள்(மெக்கானிக்)எட்டுப்பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் போக்குவரத்து துறை அமைச்சரிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு சிரமங்கள் எதிர்கொள்ளப்பட்டுவந்த நிலையில் இது தொடர்பில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பில் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கமவிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு சாலையின் அதன் முகாமையாளர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட இலங்கை போக்குவரத்துச்சபையின் மட்டக்களப்பு சாலை ஊழியர்கள்,அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.