பழுகாமம் பாரம்பரிய வைத்தியர் ஆறுமுகம் மாஸ்டர் காலமானார்

(அச்சுதன்)

மட்டக்களப்பு பழுகாமைத்தைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியத் துறையில் "கட்டு வைத்தியம்" செய்வதில் கைதேர்ந்த நிபுணர் ஆறுமுகம் மாஸ்டர் தனது 94 ஆவது அகவையில் இன்று (12.01.2014) காலமானார்.

தனது வைத்திய சேவையை இலவசமாகவே மக்களுக்கு வழங்கியவர். வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்களையும் இவரது பாரம்பரிய வைத்திய திறமையால் குணப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறந்த சமயப் பற்றாளராக திகழந்தவர். மாவேற்குடா பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவாக பல ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். இவர் சிவானந்த வித்தியாலய முன்னைநாள் ஆசான் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவருடைய ஏக புதல்வி திருமதி இராசகுமாரன் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும், மகன்மார்களான பாஸ்கரன், புட்கரன் ஆகியோர் அதிபர்களாகவும், சுதாகரன் மாவட்டச் செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளராகவும் கடமையாற்றுகின்றனர்.

அன்னாரது இழப்பு தமிழ்கூறு நல்லுலகிற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.