கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி தலைமையில் இன்று(07.01.2014) கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தார்.
மேலும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் ப+.குணரெட்ணம், பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியேகஸ்த்தர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.