பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டு மாவட்ட கிளைகளின் கௌரவிப்பு

பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான கௌரவிப்பு விழாவில், கடந்த வருடத்துக்கான சிறந்த லாபமீட்டிய கிளை, சிறந்த கிளை, சேமிப்புச் சிறப்புக்கிளை என பல்வேறு துறைகளுக்கான கௌரவிப்புகள் நேற்றைய தினம் மாலை சத்துருக்கொண்டானிலுள்ள எஸ்கோ நிறுவனக் கெத்சிஸ் மண்டபத்தில் நடைபெற்றன.


மாவட்ட முகாமையாளர் கே.சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கௌரவிப்பு விழாவில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், ஊவா பிராந்திய பொது முகாமையாளர் டி.எம்.ரி.எஸ்.குமார, உதவிப் பொது முகாமையாளர் டப்ளியூ.பி.ஏ.தர்மதாச ஆகியோர்  பிரதம அதிதிகளாக க்கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக செங்கலடி கிளை முகாமையாளர் வி.குலேந்திரன், ஏறாவூர் கிளை முகாமையார் எஸ்.எச்.எம்.இப்ராகிம், வாழைச்சேனை முகாமையாளர் பி.பிரகலாதன், காத்தான்குடி முகாமையாளர் எஸ்.அன்பழகன், களுவாஞ்சிக்குடி முகாமையாளர் ஜேகே.பிரான்சிஸ், கொக்கட்டிச்சோலை முகாமையாளர் எஸ்.விஜயசுந்தரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இக் கௌரவிப்பு விழாவில், மட்டக்களப்பு நகரக்கிளை 2013ஆண்டின் சிறந்த இலபமீட்டிய கிளையாக தெரிவு செய்யப்பட்டது. இதற்கான பரிசினை முகாமையாளர் கே.சத்தியநாதனும் கிளை ஊழியர்களும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், சிறந்த கிளைகளாக முதலாம் இடத்தினை களுவாஞ்சிக்குடிக்கிளை, இரண்டாம் இடத்தினை வாழைச்சேனைக்கிளை, முன்றாம் இடத்தினை காத்தான்குடி கிளை என்பன பெற்றுக் கொண்டன.

அதே நேரம், சிறந்த முறையில் சேமிப்புக்களைப் பெற்றுக்கொண்ட குழுக்கள், சிறந்தளவில் கடன்களை வழங்கியவர்கள், என்ற வகையில் கிளைகள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அதே நேரம், அதிக சேமிப்புக் கணக்குகளை ஆரம்பித்தவர்கள், அதிக பெறுமதிகளை சேமித்தவர்கள் என்ற அடிப்படைகளில் மாவட்டத்திலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கிகளின் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை கிளைகளில் ஒவ்வொருவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் இதுரும் வாசனா, சிறந்த கடன் வழங்குனர் அதிக பெறுமிகளான் கடன்களை வழங்கியவர்கள் என்ற வகையில் தலா மூவரும் கௌரவிக்கப்பட்டனர்.