மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட செங்கலடி, கிரான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சற் தரைக்காணிகளை மகாவலித் திட்டத்தின் கீழ் வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் முயற்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பிஎஸ்.எம்.சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள் ளகடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
மகாவலித் திட்டம் 1969ஆம் ஆண்டு காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஆட்சிக்காலத்தின் போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டது .
குறிப்பாக திருகோணமலை, பொலநறுவை, மலையகம், அம்பாறை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் மாகாவலித்திட்டமானது பகுதி பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டங்கள் பொலநறுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய (டீ) பிரிவானது மாதுறு ஓயா திட்டம் என அழைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யக் கூடிய கோறளைபற்று வடக்கு (வாகரை), கோறளைபற்று தெற்கு (கிரான); பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள கிரான் பாலத்திற்கு வடக்கு மற்றும் வடமேற்கு திசையாகவும், ஓட்டமாவடிப் பாலத்திற்கு வடக்கு பக்கமாகவும் பனிச்சங்கேணி, திருகோணமலை பிரதான வீதியிலிருந்து 3கிலோ மீற்றருக்கு மேற்காகவும் உள்ள பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இது வாகரை பிரதேச செயலகப் பிரிவின் கிராமசேவகர் பிரிவுகளான புணாணை கிழக்கு மதுரங்கேணிக்குளம், புச்சாக்கேணி, கட்டுமுறிவுக்குளம், கிரான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வடமுனை, ஊத்துச்சேனை, கல்லிச்சை, புணாணைமேற்கு, பேரில்லாவெளி, குடும்பிபிமலை, முறுத்தானை, பெண்டுகள்சேனை, வாகனேரி, ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளும் ஏற்கனவே இத்திட்டத்தின் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆயினும் இச்செயல்பாடானது அக்காலகட்டத்தில் நிலவிய அசாதாரண சூழ் நிலையைக் காரணம் காட்டித் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது .
எனினும் இப்பகுதிகளுக்கான காணி நிர்வாகவிடயங்கள் அனைத்தும் அந்த பிரதேசசெயலகப்பிரிவால் நிர்வகிக்கப்பட்டவந்தது .இதேவேளை இத்தகைய சூழ் நிலையைக் காரணம் காட்டியே மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட மகோயா, பதியத்தலாவ பகுதிகள் அம்பாறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டு பின்னர் 2010ம்ஆண்டு மகாவலித் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தகைய தந்திரோபாயத்தை கையாண்டே தற்போது மகாவலிதிட்டத்தின் கீழ் செங்கலடிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள ஈரலக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பெரிமாதவணை, மைலத்தமடு,. விளாவடிப்பொத்தானை, நெடியவட்டை ஆகிய பிரதேசங்களில் உள்ள 2800 ஏக்கர் கால்நடைகளுக்குரிய மேய்ச்;சல்தரைக்காணிகளை புதிதாக உள்வாங்குவதற்குரிய முன்முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அறியவருகின்றது .
அதேவேளை இப்பகுதில் அத்துமீறி வெளிமாவட்ட பெரும்பான்மை சமூகத்தவர்கள் காணிகளைக் கைப்பற்றி விவசாயம் செய்துவருவதும் குறிபிடத்தக்கதாகும்.
இதேபோல் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்ட கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பிமலை (கி.சே.பி) மைலத்தமடு, சிறிய மாதவணை (மலமண்டி) மோழில்வள, வம்மிக்குளவட்டை, பூவட்டை ,தகரப்பொத்தானை போன்ற கிராமங்களில் உள்ள 5000 ஏக்கருக்கு மேற்பட்ட கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைக்காணிகளை சுமார் 250 ற்கு மேற்பட்ட வெளிமாவட்ட பெரும்பான்மை இனத்தவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அத்துமீறிக் கைபற்றி விவசாயம் செய்து வருகின்றனர்.
இவ்அத்துமீறல்களை உறுதி செய்யக்கூடியவாறு 20-12-2013 அன்றும் அதன் பின்பும் புத்தபிக்கு ஒருவர் வருகை தந்து தகரப்பொத்தானையில் உள்ள மேய்ச்சல் தரைபகுதியை 50ற்கு மேற்பட்ட வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவருக்கு பகிர்ந்தளித்துள்ளமை சான்றாகும். .இது மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகத்திற்குத் தெரியாமல் நடைபெற்றுக் கொண்டுவரும் அத்துமீறல் செயல்பாடாகும். இந்நடவடிக்கைகள் மூலம் எமது மாவட்ட மக்களின் கால்நடை மேய்ச்சல் தரைக்காணிகள் கபளீகரம் செய்யப்படுகிறது. இது சமாதானத்தின் பெயரால் எமது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.
எனவே இப்பிரதேசத்தில் அத்துமீறி கைப்பற்றப்பட்ட கால்நடை மேய்ச்சலுக்குரிய காணிகளை மீளப்பெற்று கால்நடைப் பண்ணையாளர்களின் பாவனைக்கு மேய்ச்சற்தரை காணிகளை வழங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.