நேற்று புதன்கிழமை இரவு கூழாவடி ,மூன்றாம் குறுக்கில் உள்ள ஜோசப் செல்லர் என்பவரின் வீட்டில் உள்ள வாகன தரிப்பிடத்திலேய இந்த தீ விபத்து சம்பம் இடம்பெற்றதுள்ளது.
இதன்போது தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வான் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டி மற்றும் மூன்று மின்பிறப்பாக்கிகள் முற்றாக எரிந்துள்ளன.
சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த தீவிபத்துக்காரணமாக பல இலட்சம் ரூபா இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கியுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சம்பவ இடத்துக்கு சென்ற குற்றச்செயல் நடைபெற்ற இடத்தினை பரிசோதனைசெய்யும் விசேட பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த சம்வம் நாசகார செயலா மின் ஒழுக்கினால் ஏற்பட்டதா என்பது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக குற்றச்செயல் நடைபெற்ற இடத்தினை பரிசோதனைசெய்யும் விசேட பொலிஸ் குழுவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டனர்.