யானை தாக்கியதால் ஒருவர் படுகாயம்

திருகோணமலை,மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றையதினம் (04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர், மூதூர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொரியவெலி - மலிகதீவு பகுதியைச் சேர்ந்த 36 வயதான சித்தம்பலம் கனகலிங்கம் என்பவரே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.