மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மண்டூர் பிரதேசத்தில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலொசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உறுதியளித்துள்ளார்.
மண்டூர் பிரதேசத்துக்கு விஜயம் செய்த முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான குழவினர் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
மண்டூர் விஷ்ணு விளையாட்டுக்கழகத்தினர் விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விஷ்ணு விளையாட்டுக்கழகத்திற்கேன வழங்கப்பட்டிருக்கும் மைதானத்தின் புனர் நிர்மானப்பணிகள் மற்றும் மண்டூர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடம், மண்டூர் முருகனாலய தீர்த்தக்கேணிக்கான நிதி ஒதுக்கீடு செய்வது போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன பொதுமக்களும் தங்களின் பொது வான பிரச்சினைகளை இதன்போது முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கலந்துரையாடல் மற்றும் விஷ்ணு விளையாட்டுக்கழகத்தின் போசகர் வே.ஜெயரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.