படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் எட்டாவது ஆண்டு நினைவுதினம் இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நடைபெற்றபோது ஆன்மீக அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாங்கள் எமது பெரிய தலைவர்களை எமது வழிகாட்டிகளை இழந்து நிற்கின்றோம்.அவர்களது இழப்பு பெரிய இழப்பு என்பது உண்மை.இவ்விழப்புகள் தற்கொலையாகவோ,படுகொலையாகவோ இருக்கலாம்.அவ்வாறே ஜோசப்பரராஜசிங்கம் அவர்களது படுகொலை அமைந்தது.
அவரது படுகொலை குறித்து உலகமே கவலையில் ஆழ்ந்தது.ஜோசப்பரராஜசிங்கத்தினை ஒரு புனிதராகவே நான் பார்க்கின்றேன்.ஏனென்றால் மற்றவர்களுக்காக வாழ்ந்து மடிந்தவர்.ஜோசப்பரராஜசிங்கம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.பலர் அவரை மறக்கப்பட்ட ஒரு மனிதராக நினைக்கின்றனர்.அவர் மறக்கப்படக்கூடியவர் அல்ல.இந்த மக்களுக்காக,தமிழ் மக்களுக்காக,.மற்றவர்களுக்காக வாழ்ந்தவர்.அவர் மரணிக்கவில்லை.அவர் விதைக்கப்பட்டுள்ளார்.அவருடைய விதை மக்களுக்கு அவரைப்போன்று மக்களுக்கு சேவைசெய்யவேண்டிய பலரை உருவாக்கவேண்டும்.
ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் படுகொலையானது ஒரு புனித நாளிலே,புனித தலத்திலே வைத்து மேற்கொள்ளப்பட்டது.இவரது படுகொலையினை கூலிப்படையின் ஊடாகவே மேற்கொள்ளப்பட்டது என்பதை நான் உறுதியாக,திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன்.கூலிப்படையினால் மேற்கொள்ளப்பட்டதனாலேயே அவர்களது படுகொலை குறித்த விசாரணை இன்றும் முற்றுப்பெறாமல் உள்ளது.
இன்று அவரது நினைவு தினத்தில் அவரைப்பற்றி நினைவுகூர்ந்துக்கொண்டிருக்கும் இந்தவேளையில் அவரை யார் படுகொலைசெய்தார்கள்,எதற்காக படுகொலைசெய்தார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுகின்றேன்.