மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொலைக்காட்சி பெட்டியொன்று சரிந்து வீழ்ந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கோட்டைக்கல்லாறு நாவலடி வீதியை சேர்ந்த சுகுணராஜா சுதர்சிகா(04வயது)சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த சிறுமி தொலைக்காட்சி பெட்டியிருந்த இருக்கையினை இழுத்தபோது குறித்த தொலைக்காட்சி சிறுமி மீது வீழ்ந்துள்ளது.இதன்போது படுகாயமடைந்த சிறுமி உடனடியாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
அங்கு குறித்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுமியின் தாயார் தாதியாக கடமையாற்றுவதால் காலை கடமைக்கு சென்றுள்ள நிலையில் தந்தை கடைக்கு சென்றபோது வீட்டில் உறவினர் ஒருவரின் பராமரிப்பில் குழந்தை இருந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.