ஓந்தாச்சிமடத்தில் பாடசாலையில் இருந்து இடை விலகியவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் நடவடிக்கை

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினால் பாடசாலையை விட்டு இடை விலகிய மற்றும் ஒருபோதும் பாடசாலைக்கு செல்லாத ஓந்தாச்சிமடம் கிராமத்தை சேர்ந்த 23 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரின் கோரிக்கையின் பிரகாரம் ஓந்தாச்சிமடம் காளி கோயில் நிர்வாகத்தினரின் அனுசரணையில் பாடசாலை உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு கடந்த 23.12.2013 திகதி ஓந்தாச்சிமடம் சமுக பராமரிப்பு மையத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் புவிதரன், சிறுவர் பாதுகாப்பு சமுக உளநல உத்தியோகத்தர் தயாளன் ஆகியோரின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திரு.சி.சுதாகர் அவர்களின் தலைமையில், பட்டிருப்பு கல்வி வலய முறைசாரக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ரி.புஸ்பராசா, ஓந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் ச.சந்திரகுமார் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் த வரதராஜன் கிராமிய சிறுவர் கண்காணிப்புக் குழு தலைவர் ம.சிவனேசராசா, ஓந்தாச்சிமடம் காளி கோயில் தலைவர் மற்றும் செயலாளர், ஓந்தாச்சிமடம் கிராம உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தரின் பங்குபற்றுதலுடன் பெற்றோhகள்; மாணவாகள்; உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.