மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து- இருவர் பலி -இருவர் படுகாயம்

(வி.சுகிர்தகுமார் )

மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயத்துக்குள்ளானார்கள்.

பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா ஏத்தம் எனும் இடத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று பிற்பகல் 3மணியளவில் பொத்துவில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்றிலிருந்து இருந்து பொத்துவிலை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 23வயதுடைய கதிரேசு தியாகராஜா திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் பலியானதுடன் திருக்கோவில் காயத்திரி கிராமத்தை சேர்ந்த சபேசன் வினோஜன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சையளிக்கப்பட்டபோது மரணமடைந்தார்.

படுகாயடைந்த இருவரில் ஒருவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றயவர் திருக்கோவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சடலங்கள் திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.