களுவாஞ்சிகுடியில் முன்பள்ளி வாரத்தினை முன்னிட்டு நிகழ்வுகள்

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினால் மகிழுர் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 கர்ப்பினித் தாய்மார்களுக்கு முன்பள்ளி வாரத்தினை முன்னிட்டு கற்பகால பாதுகாப்பு, போசாக்கான உணவு மற்றும் சிறுவர்பாதுகாப்பு தொடர்பான அறிவுட்டல்செயலமர்வு 20.12.2013 திகதி பொது சுகாதார பரிசோதனை மண்டபத்தில்  முன்பள்ளிஅபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.அருந்ததி ஏற்பாட்டில் நடைபெற்றது.


இதில் தாதிய சகோதரி ஆர்.விக்கினேசுவரன் மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம். புவிதரன், சிறுவர் பாதுகாப்பு சமுக உளநல உத்தியோகத்தர் ரி.தயாளன் மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.