(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் மலேசியா பயணம்.
ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அழைப்பின் பெயரில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த உதைபந்தாட்ட பயிற்சி முகாமைத்துவ கருத்தரங்கு மலேசியாவில் இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இக் கருத்தரங்கில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சார்பில் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப் கலந்து கொள்வதற்காக மலேசியாவிற்கு பயணமானார்.
இச்செயலமர்வில் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த 43 லீக் செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)