மகிழூர்மனையில் மதுபோதையற்ற குடும்பம்,ஆத்மீகம்சார் விருத்தி மற்றும் சிறுவர்பாதுகாப்பு தொடர்பான அறிவுட்டல் செயலமர்வு

மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் மகிழுர்முனை கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட 65 பெற்றோர்களுக்கு சந்தோசமான மதுபோதையற்ற குடும்பம்,ஆத்மீகம்சார் விருத்தி மற்றும் சிறுவர்பாதுகாப்பு தொடர்பான அறிவுட்டல்செயலமர்வு அண்மையில் பொது நூலக மண்டபத்தில் சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.உதயசுதன் ஏற்பாட்டில் நடைபெற்றது.



இதில் மண்முனை தென் எருவில் பற்று, பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.எம். புவிதரன், சிறுவர் பாதுகாப்பு சமுக உளநல உத்தியோகத்தர் தயாளன் மற்றும் இப்பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.