ஆன்மீகப்பணி மற்றும் சமூக மேம்பாட்டினைக்கொண்டு ஜேர்மனியை சேர்ந்த அருட்தந்தை ஆற்றிவந்த பணியை தொடரும் வகையில் கொள்வின் சபை ஆரம்பிக்கப்பட்டு அவரது பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இதன் சபை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு 15வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று காலை மட்டக்களப்பு புளியந்தீவு அன்னை மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து சார்ள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட கொள்பின் சபையின் தலைவர் அருட்தந்தை ஜே.ஏ.ஜி.ரெட்னகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.