“தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான நடவடிக்கைக்கே என்னை இடைநிறுத்தியுள்ளனர்”

(பேரின்பராஜா சபேஷ்)

தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான வேலைத் திட்டங்களை முன்னெடுத்தது கட்சியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிப்பதாக கருதுயே என்னை இடைநிறுத்தியுள்ளதாக
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  சிரேஷ்ட உறுப்பினரும் தொழிலதிபருமான கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
காணி பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்துவருவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணபதிப்பிள்ளை மோகன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்மை தொடர்பாக அவரிடம் கேட்டபோது இவ்வாறு கூறினார்

“இதுவரை எனக்கு உத்தியோக ப+ர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அறிவிக்கப்படவில்லை. என்னை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக இணையத்தளங்கள் வாயிலாக மாத்திரமே அறிய முடிந்தது.

இன்று காலை கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாடினார். தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகளுக்கு எதிராக சில அதிரடியான வேலைத் திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. இந்த நடவடிக்கைகள் சிலசந்தர்பத்தில் கட்சியின் நற்பெயருக்கு களங்கள் விளைவிப்பதாக கருதுகின்றார்களோ தெரியாது.

எது எவ்வாறிருப்பினும் தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு கலாசார சீரழிவுகள் நடைபெறும் போது எம்மால் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எங்களது அதிரடியான நடவடிக்கைகள் தொடரும். தேவை ஏற்படின் கட்சியை விட்டு வெளியேறவும் தயங்க மாட்டேன்” என பதிலளித்தார்