செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல்

(பேரின்பராஜா சபேஷ்)

செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் மாதாந்த ஒன்றுகூடல் ஞாயிற்றுக்கிழமை(10) காலை 9 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.
 கல்லூரி முதல்வர்  க.அருணாச்சலம் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா தொடர்பாக பழைய மாணவர்களின்  ஆலோகசனைகள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், அண்மைக் காலங்களில் பாடசாலை சமூகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் இடம்பெற்ற  சில சம்பவங்கள், பாடசாலை அபிவிருத்தி, பாடசாலை சமூகத்திற்கும் பழைய மாணவர்களுக்குமான உறவு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடவேண்டியிருப்பதாலும்; சகல பழைய மாணவ மாணவியரும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.