காணி பெற்றுத் தருவதாக பணம் பெற்று மோசடி செய்துவருவதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இடை நிறுத்தப்பட்டார்-ரி.எம்.வி.பி விளக்கம்

தமது கட்சி விதிகளை மீறி மக்களிடம் காணி பெற்று தருவதாக பணம் பெற்று காணி வழங்காமல் மோசடி செய்துவருவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே தியேட்டர் மோகன் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மோகனுக்கு கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மோகன் கடந்த சில காலமாக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுவருவதாக பொதுமக்களாலும்,கட்சியின் உறுப்பினர்களாலும் கட்சியின் தலைவர் பணிக்குழுவிற்கு பலமுறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதற்கமைய கட்சி யாப்புவிதிகளுக்கு முரணாக நடந்துள்ளீர்கள் எனதெரியவருகின்றது. இது கட்சியின் நன் மதிப்பிற்குகுந்தம்விளைவிப்பதுடன் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையுமாக அமைகின்றது.

பலரிடம் இருந்தும் காணி பெற்றுத் தருவதாக பணம் பெற்று காணி கொடுக்காமல் மோசடிசெய்துவருவதாகவும்,கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய தங்களை கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தவது என தலைவர் பணிக்குழுவினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்காலஎல்லைக்குள் தாங்கள் கட்சி தொடர்பானஎந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, கட்சியின் பெயரைபயன்படுத்துவதோ கட்சியின் யாப்புவிதிகளுக்கு அமையமுரணானதுஎன சுட்டிக்காட்டுவதுடன் தங்கள் மீதானகுற்றச்சாட்டுக்களைவிசாரணைசெய்யும் பொருட்டுதலைவர் பணிக்குழவினால் கட்சியின் பிரதிதலைவர் க.யோகவேள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவிற்கு 21.11.2013ம் திகதிக்குமுன்னர் நியாயப்படுத்தல்களை எழுத்து மூலம் தெரியப்படுத்தும்படியும் இவர்களது பூரணத்துவமான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.