( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
சாய்ந்தமருதில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது.
ஸ்ரீலங்கா யுனெட்ஸ்ஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலையத்தில் இன்று சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.
இப்பயிற்சிப்பட்டறையில் அம்பாறை,மட்டக்களப்பு மாவட்டத்ததில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் மற்றும் துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா யுனெட்ஸ்ஸின் கணக்காய்வாளர் ஜே.பெர்ணான்டோ, தாரிக் முஹம்மட் போன்றோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இப்பயிற்சிப்பட்டறையில் தற்காலத்தில் இப்பகுதி இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,சவால்கள் மற்றும் அதற்கான தீர்வு போன்றன கலந்தாலோசிக்கப்பட்டது.